சாந்தன் இலங்கை வருவதற்கு உதவுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தாயார் வேண்டுகோள்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரெ இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பில் இருந்து பல வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கையரான சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.