மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை விமான நிலையித்தில் துபையில் இருந்து சனிக்கிழமை மும்பை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்லேட் பெட்டிகள் மற்றும் பேபி பவுடர் குப்பிகளில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.43 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 20 ஆம் திகதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வெனிசுலாவிலிருந்து வந்த பயணியிடமிருந்து ரூ.6.2 கோடி மதிப்புள்ள 628 கிராம் கோகோயின் போதைப்பொருளை மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This