காந்தி குடும்பத்தின் மீது மக்களுக்கு கோபம்!
ஏமாற்று அரசியல் செய்துவரும் காந்தி குடும்பத்தின் மீது மக்களுக்கு கடும் கோபம் இருப்பது தெளிவாகத் தெரிவதாக பாஜக எம்.பி.யும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி,
உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமேதி தொகுதிக்கு ரூ.6,523 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அமேதி தொகுதியில் உள்ள மக்களுக்கு காந்தி குடும்பத்தின் மீது கடும் கோபம் உள்ளது.
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் அதை தெளிவாகப் பார்க்கமுடிந்தது. அமேதி தொகுதியில் ராகுல் இன்று நடைப்பயணம் மேற்கொண்டார். தொகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத காலியான சாலைகளால் அவர் வரவேற்கப்பட்டார்.
பலதரப்பட்ட மக்களின் ஆதரவினால் நான் அமேதியில் வெற்றி பெற்றுள்ளேன். ராகுலின் நடைப்பயணம் நடைபெறும் காலியான சாலைகள், காந்தி குடும்பத்தின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியையே காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.