அனைவரும் மோடியின் அடிமைகளாக மாற்றப்படுவோம்!: மல்லிகார்ஜுன் கார்கே

அனைவரும் மோடியின் அடிமைகளாக மாற்றப்படுவோம்!: மல்லிகார்ஜுன் கார்கே

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கவில்லையெனில் அனைவரும் மோடியின் அடிமைகளாக்கப்படுவோம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸின் நியாய சன்கல்ப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்கே, ‘மோடி ஒரு பொய்களின் அதிபதி’ எனக் கூறினார்.

‘ஒரு வருடத்திற்கு 20 கோடி வேலைவாய்ப்புகளை கண்டிப்பாக உருவாக்கித் தரமாட்டேன் என்பதே மோடியின் வாக்குறுதி’ என அவர் தெரிவித்தார். ‘ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் தருவதாகவும்கூடக் கூறினார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அவரை ‘பொய்களின் அதிபதி’ என்றுதான் அழைக்க வேண்டும்.’ எனக் கூறினார் கார்கே.

‘மோடி நம் நாட்டின் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் மீட்கும் இந்த யுத்தத்தில் நாம் தோற்றால், அனைவரும் மோடியின் நிரந்தர அடிமைகளாக்கப்படுவோம்’ என அவர் கூறினார்.

‘மோடியின் அடிமைப்படுத்துதலினால், நம் நாட்டின் இளைஞர்கள், பெண்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என அனைவரும் வரும் காலங்களில் துன்புறுவார்கள்.’ என கார்கே கூறினார்.

மேலும் பேசிய அவர், ‘வேலையில்லாத்திண்டாட்டம் பெருகிவரும் நிலையில் 30 லட்சம் அரசுப்பணியிடங்கள் காலியாக உள்ளன. மோடி அரசு அந்த இடங்களை நிரப்புவதற்கு எந்த முயற்சிகளும் எடுக்காததற்கு காரணம், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த இடங்களை நிரப்புவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.’ எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.

CATEGORIES
TAGS
Share This