வன்முறையை பரப்பும் ஆர்எஸ்எஸ், பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

வன்முறையை பரப்பும் ஆர்எஸ்எஸ், பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நியாயயாத்திரை நேற்று காலை கிஷன்கஞ்ச்வழியாக பிஹாருக்குள் நுழைந்தது.

அப்போது அவர் பேசுகையில், “மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தம் நாட்டில் வன்முறையும், வெறுப்பையும் பரப்புவது மட்டுமே. அதனால்தான் மக்கள், மதம், சாதி மற்றும் மொழியின் பெயரால் தங்களுக்குள் சண்டையிடதூண்டுதலுக்கு ஆளாக்கப்படுகின் றனர். இதனால்தான் வெறுப்பின்சந்தையில் அன்பெனும் கடையைதிறக்க விரும்பி யாத்திரை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

CATEGORIES
TAGS
Share This