பப்புவா நியூ கினியாவுக்கு 8.3 கோடி ரூபா நிவாரணம் அனுப்பியது இந்தியா!

பப்புவா நியூ கினியாவுக்கு 8.3 கோடி ரூபா நிவாரணம் அனுப்பியது இந்தியா!

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு ரூ.8.3 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் மலையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்து வந்த சுமார் 26 ஆயிரத் துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு களுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

மேலும், பப்புவா நியூ கினியா நாட்டுக்கு உடனடி நிவாரண உதவியாக சுமார் ரூ.8.3 கோடி மதிப்பிலான 11 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் 6 டன் மருத்துவ உதவிகளுடன் இந்தியா சிறப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.

இந்தியாவிலிருந்து சென்ற நிவாரணப் பொருட்கள், பிரிட்டனில் உள்ள கிம்பே விமான நிலையத்தில் இறக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலிய விமானப்படை விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்பப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This