புனித காணிக்கை மாதாவின் 400 ஆவது பெருவிழா!

புனித காணிக்கை மாதாவின் 400 ஆவது பெருவிழா!

இலங்கையில் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் 400 ஆவது பெருவிழா இன்று (27) கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம் 400ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கையின் பழமையான ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படுகின்றது.

இன்று மாலை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜுலியன் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் விசேட ஜெபமாலை வழிபாடு நடைபெற்றதுடன் கொடிச்சீலையும் மாதாவின் திருவுருவமும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்ற இடத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலயத்தின் பங்கு மக்களின் குழுத்தலைவர்களின் பங்களிப்புடன் பங்குத்தந்தையினால் கொடியேற்றம் சிறப்பாக நடாதத்தப்பட்டது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து தேவாலயத்தில் விசேட திருப்பலி பூஜையும் நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This