கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு

கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது அங்கு, பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவில் தற்போதைய கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது பற்றி அந்நாட்டு மருத்துவத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், KP.2, என்ற புதிய வகை உப திரிபே அண்மைக் காலமாக நாட்டில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், இந்தவகை கொவிட் திரிபுகளினால் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை என மருத்துவத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This