பதவி விலகிய பிரதமர்
சிங்கப்பூரின் நீண்ட காலம் பிரதமராக கடமையாற்றிய லீ செய்ன் லோங் பதவி விலகியுள்ளார்.
20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னர் உத்தியோகபூர்வமாக பிரதிப் பிரதமரும், நிதியமைச்சருமான லோரன்ஸ் வொங்கிடம் அதிகாரத்தை புதன்கிழமை (15) இரவு கையளித்தார்.
1965ஆம் ஆண்டு சுதந்திர தேசமான பின்னர் நான்கு பிரதமர்களையே சிங்கப்பூர் கொண்டுள்ளதுடன் அனைவரும் மக்களின் நடவடிக்கை கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
முதற் பிரதமர் லீயின் தந்தை லீ குவான் யீ, பரவலாக நவீன சிங்கப்பூரின் நிறுவுநர் எனக் கருதப்படுவதுடன், 25 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தார்.
லீ அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சரரொருவராக தொடர்ந்தாலும் சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவமானது லீ குடும்ப நிழலில் இருந்து வெளிவரும் சமிக்ஞையாக இது நோக்கப்படுகிறது.
CATEGORIES உலகம்