மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ். தொண்டைமானாறு – சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை (20) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் (5, 65 600) பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This