ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது நபர் ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 22ஆம் திகதி அயோத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கும் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என இன்டெகாப் அலாம் என்ற நபர் மிரட்டல் விடுத்தார் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜனவரி 19ஆம் திகதி இந்த நபர், பொது மக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது பெயரை சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 22ஆம் திகதி அயோத்தி ராமர் கோவிலை வெடிக்க செய்வேன் என மிரட்டினார். இவர் எவ்வித குற்ற பின்னணியும் கொண்டிருக்கவில்லை, ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார், என அராரியா காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This