டெல்லியில் கடும் பனிப்பொழிவு ; விமானங்கள், ரயில்கள் தாமதம்!

டெல்லியில் கடும் பனிப்பொழிவு ; விமானங்கள், ரயில்கள் தாமதம்!

இந்திய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.

வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன.

பனிமூட்டம் காரணமாக டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையத்தில் பல ரயில்கள் தாமதமாக வந்தன. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். அடர்த்தியான பனிமூட்டத்தால் டெல்லி செல்லும் 23 ரயில்கள் ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதமாகச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், பல்வேறு விமானங்கள் புறப்பாடு, வருகையும் தாமதமாகியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள தெருக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் நெருப்பை மூட்டி அதில் குளிரை தணித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This