வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் பயணம்!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் பயணம்!

மத்திய வெளியுறவுத்துறை அmமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் செல்கிறார். நாளை மறுதினம் அங்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This