சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலி!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலி!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாட்டில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகின்றது. இதனிடையே உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் புதிய திரிபான ஜெஎன்.1 தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் இப்புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று தகவலின்படி 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்த ஒருவர் சென்னையில் இன்று உயிரிழந்துள்ளார்.

சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அவர், கடந்த டிசம்பர் 31இல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 42 வயதான அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

CATEGORIES
TAGS
Share This