சென்னையில் இருந்து யாழ். திரும்பியவர் கைது!

சென்னையில் இருந்து யாழ். திரும்பியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த சந்தேக நபர், நீண்ட காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This