வரியின்றி அரச வருமானத்தை அதிகரிப்பது குறித்து சஜித் விளக்கம்!

வரியின்றி அரச வருமானத்தை அதிகரிப்பது குறித்து சஜித் விளக்கம்!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் அப்பிள்டன்(Micheal Appleton) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (04) குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் தற்போதைய சமூக,பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் மக்களை ஒடுக்கி அதிக வரி விதிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், வரி விதிக்காமல் அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் விசனம் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This