6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு!

6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு!

பல பொருட்களுக்கான இறக்குமதி விசேட பண்ட வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உளுந்து, பயிறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதி விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

உளுந்து கிலோ கிராம் ஒன்றுக்கு 200 ரூபாயாக இருந்த இறக்குமதி விசேட பண்ட வரி 300 ரூபாவாகவும், கௌபா, கௌப மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு கிலோ கிராமுக்கு 70 ரூபாயாக இருந்த விசேட பண்ட வரி 300 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சோளத்ததுக்கு 25 ரூபாயாக விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், சோளம், உளுந்து, கௌபீஸ், கௌபீஸ் மற்றும் குரக்கன் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This