பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்!

பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் நேற்றையதினம் (04) பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகரை பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது, ​​நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஆதரவிற்கு பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் ஊழியர்களின் ஆதரவிற்காக தனது நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவிய ஆதரவைப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்து கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This