வட, கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது

வட, கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர்- தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு .

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர் அவர்களது பணியை நாம் முன்னெடுப்பதற்காகவே இன்று தனித்துவமாக நாம் போட்டியிடுகின்றோம் இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இன்று தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியான நிலையிலும் கேலிக்கூத்தான நிலையிலும் காணப்படுகிறது

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய தார்மீக கடமை என் மீது சுமத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன் வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது.

அந்த காலங்களில் இவர்களுக்கு நாம் விட்டுக் கொடுப்புகளை முன்னெடுத்து வந்தோம் தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ஆனால் அவர்கள் தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர், கடந்த காலங்களில் தேசிய கட்சிகளின் இணைந்து செயல்பட்டதால் நமது இடங்கள் பறிபோகி உள்ள காரணத்தினால் நாங்கள் தற்போது சிறந்த வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளோம் எனவே அன்பான மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

CATEGORIES
Share This