நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 13 ஆம் திகதி மீள ஆரம்பம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை 13 ஆம் திகதி மீள ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறைக்கு (கே.கே.எஸ்.) இடையிலான பயணிகள் கப்பல் சேவையா மே 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இரு நாடுகளுக்குமிடையிலான கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் கடலின் சாதகமற்ற சூழ்நிலை காரணமாக அவை ரத்துச் செய்யப்பட்டதாக கூறினார்.

கடல் சீற்றம் காரணமாக கடந்த காலங்களில் சேவை ரத்து செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், 40 வருட இடைவெளிக்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் ‘செரியபாணி’ பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்ததையடுத்து பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

‘செரியபாணி’ என்பது ஷிப்பிங் கோர்ப்பரேஷன் ஒப் இந்தியா (எஸ்.சி.ஐ.) க்கு சொந்தமான அதிவேகக் கப்பலாகும், இது 35 மீற்றர் நீளமும், 9.6 மீற்றர் அகலமும் 150 பயணிகள் தங்கும் திறனும் கொண்டது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆகும், ஒரு வழிப் பயணத்திற்கு 26,750 இலங்கை ரூபாவும், இரு வழிப் பயணத்திற்கு 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்பட்டது.

ஒவ்வொரு பயணிகளும் 50 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையின் ஆஷா ஏஜென்சி லிமிடெட் இந்தக் கப்பல் சேவையை இயக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் பொறுப்பாகும், மேலும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் டிக்கெட் விற்பனை முகவரையும் நியமித்துள்ளனர்.

CATEGORIES
Share This