ஆசியான் – இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு இன்று; எதிர்கால இலக்குகள் குறித்து மோடி ஆலோசனை

ஆசியான் – இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு இன்று; எதிர்கால இலக்குகள் குறித்து மோடி ஆலோசனை

ஆசியான் – இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெறுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது.

அத்துடன் கிழக்கு ஆசியா அமைப்பின் 19வது உச்சி மாநாடும் இங்கு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 02 நாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் புறப்பட்டுள்ளார்.

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் பங்கேற்பு பத்தாவது முறையாகும்.

அத்துடன் இந்த மாநாடுகளுக்கு இடையே உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10 ஆம் ஆண்டை இந்த வருடம் கொண்டாடுகிறது. ஆசியான் தலைவர்களுடன் இணைந்து, எதிர்கால திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு உள்ளிட்டவற்றில் நிலவும் சவால்களை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் கிழக்கு ஆசிய மாநாட்டின் மூலம் உருவாகும்“, எனக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This