இந்தியா செல்லும் அநுர: மோடியின் அழைப்பை ஏற்றார்

இந்தியா செல்லும் அநுர: மோடியின் அழைப்பை ஏற்றார்

பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பிற்பகல் நடத்திய சந்திப்பிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் முதல் இராஜதந்திரியாக சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை வந்தார்.

இந்தப் பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் டில்லிக்கு வருமாறு மோடியின் அழைப்பை ஜெய்சங்கர், அநுரகுமார திஸாநாயக்கவிடம் வழங்கினார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதுடன், இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Oruvan
CATEGORIES
Share This