மத்திய கிழக்கில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலைகள் உயர்வு
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்வடையக்கூடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய கிழக்கில் விநியோக ஆபத்துகளை எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்நோக்குவதன் காரணமாக உலகச் சந்தையில் நான்காவது நாளாக கச்சா எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டன.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.2 வீதம் ஏற்றம் கண்டு 74.80 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டாலும் எண்ணெய் விநியோக வழிகள் அடைக்கப்பட்டாலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உலகச் சந்தைக்கு 15 வீதமான கச்சா எண்ணெய்யையும் 10 வீதமான எரிவாயுவையும் ஈரானே ஏற்றுமதி செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்