அனுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து; சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு நாடுகள்

அனுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து; சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு நாடுகள்

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் சீன அரசாங்கம் மற்றும் சீன மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவரது வாழ்த்துச் செய்தியில்,

“சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு நாடுகள். நமது இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட கடந்த 67 ஆண்டுகளில், இருதரப்பும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் அளித்து, வெவ்வேறு அளவிலான நாடுகளுக்கிடையே நட்பு ரீதியான சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

சீன-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, எங்களது பாரம்பரிய நட்பை கூட்டாக முன்னெடுத்துச் செல்லவும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும் அதிக பலன்களை அடையவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.

நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் சிறந்த நட்பின் அடிப்படையிலான சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு, கூட்டுறவின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுத்து, இரு நாட்டு மக்களுக்கும் அதிக நன்மைகளை ஏற்படுத்துவோம்“ என சி ஜின்பிங் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Oruvan

CATEGORIES
Share This