இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் – துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும்
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்;பு ஜூலையின் 41 வது வருடத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
41வருடங்களிற்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.
ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன,மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைகளிற்கு இலக்கானார்கள்,நாட்டிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களிற்கு எதிரான இனக்கலவரம்,பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுதமோதலாக பரிணமித்தது.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது.
2022 மே18ம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதுநிறைவேற்றியது.
இந்த அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில்கனடாவின் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினருடன் ஐக்கியத்தை உள்ளதை வெளிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகின்றது.
மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும்.
கறுப்புஜூலையின் பின்னர் 1800 தமிழர்கள் கனடாவிற்குவருவதற்கும் தங்களினதும் தங்கள் குடும்பங்களினதும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான விசேட நடவடிக்கைகளை கனடா எடுத்தது.
உலகில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் தற்போது கனடாவிலேயே வாழ்கின்றனர்,ஒவ்வொருநாளும் அவர்கள் எங்கள் சமூகத்திற்கு வழங்குகின்ற பங்களிப்பை நாங்கள் கொண்டாடுகின்றோம்,நாங்கள் எப்போதும் அவர்களை பாதுகாப்போம்.
இன்றைய நாளில்,கறுப்புஜூலையில்துயரத்தை சந்தித்த அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதில் நான் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்து கொள்கின்றேன்.