சிறிய கார்களில் ஏறும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, ஏறக்குறைய நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொகுசு வாகனங்களை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறைந்த விலையில் சிறிய வாகனங்கள் மீது பாராளுமன்றம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக எரிபொருள் விலை, சேவைக் கட்டணம், பராமரிப்புச் செலவுகள் போன்ற காரணங்களால் இவ்வாறு செய்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், அதிக எரிபொருள் செலவு காரணமாக, பாராளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எம்.பி.க்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பஸ்கள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஆசைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில எம்.பி.க்கள் தங்களது பெரிய வாகனங்களை விற்பனை செய்திருப்பதும் தெரிந்ததே.
CATEGORIES செய்திகள்