நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?; நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?; நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும்.

விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் இடம்பெறும்.

முன்னாள் தேர்தல் கண்காணிப்பாளர் ரஜித்ன் கீர்த்தி தென்னகோன் கருத்துப்படி, சட்ட கட்டமைப்பின் கீழ் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது:

  1. நாடாளுமன்றம் கலைப்பு – செப்டம்பர் 25, 2024
  2. நியமனக் காலக்கெடு – 2024 ஒக்டோபர் 04, அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள், நியமனங்களுக்கு ஏழு நாள் கால அவகாசம் இருக்கும்.
  3. தேர்தல் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.
  4. தேர்தல் நாள் – கலைக்கப்பட்ட 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையின்படி, நவம்பர் 22 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்.
CATEGORIES
Share This