ரணில் ஓர் இனவாதி – தமிழர்களை கடைசி நேரத்தில் பழி வாங்கிவிட்டார்: சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

ரணில் ஓர் இனவாதி – தமிழர்களை கடைசி நேரத்தில் பழி வாங்கிவிட்டார்: சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியாது இறுதித் தருணத்தைில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுத்துள்ளதன் மூலம் அவர் ஒரு இனவாதி என்பதை நிரூபித்துள்ளதுடன், தமிழர்களை பழிவாங்கியும் விட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன்,

என்னால் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றில் விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

குறித்த திருத்தச்சட்டமூலம் இன்றைய தினம் மூன்றாம் வாசிப்புக்காக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

நேற்றைய தினம் நான் ஜனாதிபதிக்கு அழைத்த போது, மூன்றாம் வாசிப்புக்காக இந்த திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் சபாநாயகருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்துவதாகவும் கூறினார்.

ஆனால், இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேறு வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க தீர்மானம் எடுத்தமையால் இதனை இன்றைய நிகழ்சி நிரலில் உள்வாங்காது தடுத்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்காமைால் தமிழர்களை பழிவாங்கியுள்ள ரணில். ரணில் விக்ரமசிங்க தமது காலத்தை முடிக்கும் தருணத்தில் ரணில் ராஜபக்ச என்று நிரூபித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இனவாதியாக தமிழ் மக்கள் முன்பும் இந்த நாட்டு மக்கள் முன்பும் காட்டப்படுவார்.

தமிழ் மக்களுக்கு எதிராக அவர் செய்யும் இந்த விடயம் இனவாதியாக காட்டிக்கொள்ளவே. தமிழ் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அவர் கொடுத்துள்ளார். ஆனால், எதனையும் அவர் செய்யவில்லை.

கடைசி நேரத்தில் எம் மக்கள் மீது வெறுப்பை காட்டும் செயல்பாடாகவே இதனை பார்க்கிறோம்.” என்றார்.

CATEGORIES
Share This