கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய கடற்படை ஹெலிகொப்டர்; மூவர் மாயம், தேடல் பணிகள் தீவிரம்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய கடற்படை ஹெலிகொப்டர்; மூவர் மாயம், தேடல் பணிகள் தீவிரம்

இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) ஹெலிகொப்டரில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று பணியாளர்கள் திங்கள்கிழமை (02) இரவு முதல் காணாமல் போயுள்ளனர்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்திலான அரேபிய தீபகற்பத்தில் எண்ணெய் உற்பத்தி கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.

“மோட்டார் டேங்கர் ஹரி லீலா“ என்ற இந்த கப்பலில் உள்ள பணியாளர் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாக இந்திய கடற்படைக்கு தகவல் வந்தது.

அதனைத் தொடர்ந்து காயமடைந்தவரை கரைக்கு அழைத்து வர இந்திய கடற்படை வீரர்கள் நான்கு பேருடன் லைட் ஹெலிகொப்டர் நேற்றிரவு புறப்பட்டது.

எனினும், ஹெலிகொப்டர் கப்பல் அருகே சென்றபோது தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், சிறிது நேரத்தில் குறித்த ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஹெலிகொப்டரில் இருந்த நான்கு வீரர்களும் மாயமானர்கள். அதில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற மூன்று பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஹெலிகொப்டர் பாகங்கள் கிடக்கும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் நான்கு கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This