பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு: சிறீதரன் எம்.பி உறுதி

பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவு: சிறீதரன் எம்.பி உறுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரான தனக்கு சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்கான குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும்.

இந்நிலையில், தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This