உலகின் 2-வது மிகப்பெரிய வைரத்தை கண்டுபிடித்தது கனடா நிறுவனம்
போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 கரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் வைரத்திற்கு பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும். போட்ஸ்வானாவின் தலைநகரான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 காரட் செவெலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியது. அதன் விலையை வெளியிடவில்லை.
2016-ம் ஆண்டு இதே சுரங்கத்தில் தோண்டி எடுக்கப்பட்ட 1,109 கரட் வைரத்தை, 2017-ம் ஆண்டு கிராஃப் டைமண்ட்ஸின் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராஃப் $53 மில்லியனுக்கு வாங்கினார்.