74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு: திகாமடுல்ல தொகுதியில் அதிகளவானோர் பதிவு

74 வேட்புமனுக்கள் நிராகரிப்பு: திகாமடுல்ல தொகுதியில் அதிகளவானோர் பதிவு

நாடாளுமன்ற தேர்தலுக்காக 764 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளுக்கும் 690 குழுக்கள் போட்டியிடும் என அறிவித்தார்.

இம்முறை திகாமடுல்ல தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகளும் குழுக்களும் போட்டியிடுகின்றன.

குறித்த தொகுதியில் 64 குழுக்கள் போட்டியிடுகின்றன. 72 குழுக்கள் வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தாலும் அவற்றில் 08 நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் குறைந்த அளவிலான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாவட்டங்களிலும்15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.

வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் சில தினங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

CATEGORIES
Share This