செந்திலின் கூட்டத்தில் பதற்றம்: கேள்விக் கணைகளால் வெளியேறினார்

செந்திலின் கூட்டத்தில் பதற்றம்: கேள்விக் கணைகளால் வெளியேறினார்

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.  

திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை (11)  ஆளுநர் செந்தில் தொண்டமானால் யாப்புக்கு முரணாக நடத்தப்பட்டது

அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்பட்டுள்ளது என்றார்.  இந்நிலையில், சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது என்றார்.

கூட்டத்தை அவசரமாக முடித்த ஆளுநர் செந்தில் தொண்டமான்,    மக்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றார் 

கூட்டத்திற்கு வருகை தந்த திருகோணமலை சேர்ந்த ஆயுள் கால உறுப்பினர்கள் ,தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின் வரும் கேள்விகள் விளக்கங்கள் மக்களால் கூறப்பட்டன 

01. நீதிமன்றத்தால் நிர்வாக சபையிடம் கோவிலை கடந்த 2009 ம் ஆண்டு ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை , 

ஆலயத்திற்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விவரங்கள் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு கடந்த சிவராத்திரி நிகழ்வில் காண்பிக்கப்பட்டது, அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை, அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ? 

02. ⁠திருகோணமலையில் தீர்க்கப்பட வேண்டிய கன்னியா , கோணேசர் ஆலய சட்ட விரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுன் தாலி விஷயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின்  நோக்கம் என்ன ? 

03. ஆலயம் தொடர்பான   வழக்கொன்று குடியியல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி சட்டத்திற்கு முரணாக அவசர கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை என்ன ?

⁠ மக்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்று விட்டார்.

CATEGORIES
Share This