வட, கிழக்கு ஆளுநர்களை சந்தித்த சொல்ஹெய்ம்

வட, கிழக்கு ஆளுநர்களை சந்தித்த சொல்ஹெய்ம்

நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் வடக்கு, கிழக்கு மாகாண ஆளுநர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை யாழ் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய எரிக் சொல்ஹெய்ம்,

யுத்தத்தின் பின்னர் வடமாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மக்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் சுற்றாடல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள சதுப்புநில சூழல் அமைப்பு குறித்தும், அங்குள்ள சதுப்புநில மாசுபாடுகள் குறித்தும் கண்டறிவதற்காக கண்காணிப்புப் பயணத்தில் இருவரும் ஈடுபட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நில அபிவிருத்தி, சுற்றுச்சூழல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளை எரிக் சொல்ஹெய்ம் மீளாய்வு செய்திருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் குறித்து எரிக் சொல்ஹெம், ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையானார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்று சூழலை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆளுநர் எரிக் சொல்ஹெமிடம் விளக்கமளித்துள்ளார்.

சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
Share This