இஸ்ரேலுக்கு அமெரிக்கா மேலும் ஆயுத உதவிகள்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா மேலும் ஆயுத உதவிகள்

காசா போர் நீடிக்கும் நிலையில் அமெரிக்க தயாரப்பு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுக்கு செலவு செய்வதற்காக இஸ்ரேலுக்கு மேலதிகமாக 3.5 பில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கவுள்ளது.

இஸ்ரேலுக்கு பல பில்லியன் டொலர்கள் பெறுதியான வெளிநாட்டு இராணுவ நிதியை விடுவிக்க அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் காங்கிரஸ் அவைக்கு அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரலில் காங்கிரஸினால் நிறைவேற்றப்பட்ட இஸ்ரேலுக்கான 14.5 பில்லியன் டொலர் கூடுதல் நிதி சட்டத்தில் இருந்து இந்த நிதி விடுவிக்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிதியின் ஓர் அங்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் இஸ்ரேலிய இராணுவப் பிரிவுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த இராணுவப் பிரிவுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்த நிலையில் இதன் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக உள்ளது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This