கொழும்பில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட அம்பியூலன்ஸ்: போக்குவரத்து பொலிஸாரின் அலட்சியமா? அசமந்தமா?

கொழும்பில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட அம்பியூலன்ஸ்: போக்குவரத்து பொலிஸாரின் அலட்சியமா? அசமந்தமா?

உலகின் மிகவும் பரபரப்பான நகரங்களில் இலங்கையின் தலைநகர் கொழும்பும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

இங்கு காலை முதல் இரவு வரையில் கடும் வாகன நெரில் காணப்படும். இதனால் பலரும் பலவகையான நெருக்கடிகளை எதிர்கொள்வதுடண்டு.

ஒரு சில நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் வீதியை கடப்பதற்கு கூட 10-15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் எரிச்சலடையும் பாதசாரிகள் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்படுவதும் உண்டு.

இவ்வாறான மிகவும் பரபரப்பான காலைப்பொழுதில் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் கடும் வாகன நெரிசலுக்கு மத்தியில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் இன்று காலை பதிவாகியிருந்தது.

அம்புலன்ஸ் வண்டி தனது பிரத்தியேகமான ஒலியை எழுப்பிய போதிலும், அதற்கு வழிவிடுவதற்கு யாரும் முன்வரவில்லை.

மிகவும் அவசரமாகச் சென்ற அந்த வண்டி சுமார் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் அம்பியூலன்ஸ் வண்டிக்கு வழிவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட வாகன சாரதிகள் அனைவரும் இன்றைய இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயற்பட்டுள்ளனர்.

உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுபடுகின்ற அம்புலன்ஸ் வண்டிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது நியதி.

CATEGORIES
Share This