யாழில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளும் ஜேர்மன் பெண்; தமிழர் கலாச்சார ஆடை அணிந்து நிகழ்வில் பங்கேற்பு
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டினை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார்.
யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆனைக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற தொல்லியல் அகழ்வாய்வு பணிகளிலும் பங்கேற்றியுள்ளார்.
தற்போது ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆறு மண் படை மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான முழு ஏற்பாட்டையும் அவரே செய்து வருகின்றார்.
மண் படைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றின் காலத்தினை காணிப்பு செய்வதற்காக ஜேர்மன் நாட்டிற்கு எடுத்து செல்லவுள்ளார்.
ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது, தனது பிள்ளைகளுடன் தமிழர் கலாச்சார உடைகளுடன் பங்கேற்றி இருந்தமையுடன், அவரது பிள்ளைகளால் நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.