ரணிலை ஆதரித்தவர்கள் நீக்கம்: பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம்

ரணிலை ஆதரித்தவர்கள் நீக்கம்: பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதன்படி, தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர் பதவிகளில் இருந்து இவ்வாறு பலர் நீக்கப்பட உள்ளனர்.

குறித்த எம்.பி.க்களின் செயற்பாடுகளை உன்னிப்பாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்க அக்கட்சி நேற்றுமுன்தினம் (29) தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (30) அறிவித்தது.

இதன் காரணமாக கட்சியின் பொறுப்புகளுக்கு புதியவர்களை விரைவாக நியமிக்க அக்கட்சி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து பிரசன்ன ரணதுங்கவும், காலி மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ரமேஷ் பத்திரன, மாத்தறை மாவட்ட அமைப்பாளர் கஞ்சன விஜேசேகர ஆகியோரை ஏற்கனவே அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

CATEGORIES
Share This