தனிப்பட்ட முறையில் நண்பர்கள்: பிளவுகள் தொடர்பாக விளக்கமளிக்கிறார் நாமல்
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவு தெரிவிக்காது என (29) அறிவித்ததன் பின்னர் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த சூழ்நிலை தொடர்பில் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.
அதன்போது, இவ்விடயத்தை நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்த்தோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேர்தல் ஒன்றுக்கு முன்னிலையாகும் போது பொதுவாக வரலாற்றில் எந்தவொரு கட்சியினதும் பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.
கலந்துரையாடி தமது கருத்துக்கள் தொடர்பில் வினவுவார்கள். அது ஒரு பொதுவான விடயம்.
நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கட்சியை உறுதிப்படுத்திக் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
கட்சியை உறுதிப்படுத்தி எங்கள் கொள்கைகளை வெல்ல நாங்கள் செயற்பட வேண்டும்.
நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை வெறுக்கும் பக்கத்தில் நிற்கின்றோம். அதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களுடனேயே கொடுக்கல் வாங்கல் காணப்படுகின்றதே தவிர, விரும்பிய அரசியலினுள் அல்ல.
சில நேரங்களில் விருப்பு அரசியலில் ஈடுபட இதுவே சிறந்த நேரம் என சிலர் நினைக்கலாம்.
தேசிய வேலைத்திட்டத்துடன் பயணித்த தலைவர்கள் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தனர்.
தற்போது சென்று விட்டதாக கூறுபவர்கள் எங்களுடைய வீட்டிற்கும் வந்துச் சென்றவர்கள் சிலர் நேற்று இரவு மீண்டும் வந்தார்கள். இன்று காலையும் சந்தித்தேன்.
இந்த அரசியல் நன்று பழக்கப்பட்டது. இவ்வாறு நடப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ” எனத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பிரிந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் நாம் பிரிக்கப்படவில்லை, அந்த உறவு இன்றும் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.