பெரமுனவில் ரணிலுக்கு மீள இடமுண்டா?: உறுதிபடக் கூறும் உதயங்க வீரதுங்க

பெரமுனவில் ரணிலுக்கு மீள இடமுண்டா?: உறுதிபடக் கூறும் உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் உடன்பட முடியுமானால் மேலும் அக்கட்சியினுள் இடமுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.

தம்மிக பெரேராவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் பொருளாதார கொள்கைகள் பொருந்தினால் அதிஷ்டசாலியான வேட்பாளராக தம்மிக்க பெரேரா உருவாகலாம் எனவும் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையை கணிக்கும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான உதயங்க வீரதுங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை அதன் செயலாளர் சாகர காரியவசம் உறுதியாக முன்வைத்தார் எனினும், ஒரு வருடத்திற்கு முன்னரே பொதுஜன பெரமுன இந்த தீர்மானத்தை எடுக்கும் என நான் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் நாட்டின் எதிர்காலம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவராக தம்மிக்க பெரேரா முன்னிலையாவார் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவை முன்னிலைப்படுத்துவது உறுதி எனவும் அடுத்த ஜனாதிபதியாக தம்மிக்க பெரேராவை நியமித்தே பசில் ராஜபக்ச ஓய்வார் எனவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவ்வாறு நியமிக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமராக நாமல் ராஜபக்ச பதவியேற்பார் என உதயங்க வீரதுங்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This