சிரியாவில் சித்திரவதை அனுபவிக்கும் இலங்கைப் பெண்: விரைந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

சிரியாவில் சித்திரவதை அனுபவிக்கும் இலங்கைப் பெண்: விரைந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

சிரியாவில் வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றும் இலங்கை பெண் ஒருவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் தான் பணிபுரியும் வீட்டின் முதலாளிகள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடூரமாக தாக்குவதாகவும் குறித்தப் பெண் கூறியுள்ளார்.

குருநாகல் – தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 34 வயதான துஷாரிகா என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

இவர் ஒராண்டு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் துபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அங்கு மிகவும் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

துபாய் வீட்டில் அவர் மிகவும் அன்பாக நடத்தப்பட்டிருக்கிறார். எனினும், துபாய் நாட்டினர் திடீரென வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்துள்ளனர்.

இதனால் குறித்த பெண்ணுக்கு இலங்கைக்கு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை கொடுத்துள்ளனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் துஷாரிகாவேலைவாய்ப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்தப் பெண்ணிடம் விமானச் சீட்டு இருந்தும், வேலைவாய்ப்பு நிறுவனம், சிரியாவில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு அனுப்பியுள்ளது.

தற்போது சிரியாவில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் குறித்த பெண், கடும் வன்முறைகளுக்கு மத்தியில் பல மாதங்களாக சம்பளம் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நேரங்களில் ரப்பர் குழாய்களால் அடிப்பதாகவும், அந்த தாக்குதல்களால் தனது உடலில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காயங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்காரர்கள் தனது தலையில் கடுமையாக தாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாக, தன்னை எப்படியாவது நாட்டிற்கு அழைத்து வருமாறு இலங்கை அரசாங்கத்திடம் துஷாரிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

CATEGORIES
Share This