2024ல் டெங்கு பாதிப்பு 30,000 ஐ தாண்டியது!

2024ல் டெங்கு பாதிப்பு 30,000 ஐ தாண்டியது!

2024 ஆம் ஆண்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூலை 13 நிலவரப்படி, 2024 இல் மொத்தம் 30,057 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இத்தொகை 6,910 ஆகும்.

மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மாகாண வாரியாக அதிகபட்சமாக, ஜூலை மாதத்தில் 1,818 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், டெங்குவைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

CATEGORIES
Share This