போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

போலிப் பிரசாரம் ஊடாக மக்களை ஏமாற்ற முடியாது!

அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மெல்சிறிபுர பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”21 ஆம் திகதி இந்த நாட்டு மக்களின் வெற்றி நாளாகும்.

சாதாரண மாற்றமல்ல.நீண்டகாலமாக மக்கள் எதிர்ப்பார்த்த மாற்றமாகும். வறுமையான நாடு என்ற அடையாளத்தினையே ஆட்சியாளர்கள் உலகிற்கு வெளிப்படுத்தினர்.மக்கள் இன்று ஆட்சி மாற்றத்திற்காக எதிர்ப்பார்த்த தருணம் வந்துள்ளது.

21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் ஊடாக நாட்டில் மக்கள் யுகம் ஆரம்பிக்கப்படும்.தேர்தல் வெற்றியின் முழுமையான பங்குதார்கள் நாட்டு மக்கள்.தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றியினை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நாம் கட்டம் கட்டமாக இந்த நாட்டை மீட்டெடுப்போம். இந்த நாட்டில் அரசியல் என்பது அபகரிப்பாகவே காணப்பட்டது. அந்த யுகத்தை நாம் மாற்றுவோம். இந்த நாட்டில் அரசியல்வாதிகள் செல்வந்தர்களாக மாறினார்கள் முதலில் நாம் ஊழல் அரசியலை முறியடிப்போம்.

மக்களுக்கான ஆட்சி மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திட்டங்களே எமது நோக்கமாகும் அரசியல் வரப்பிரசாதங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விடுத்து மக்களின் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புக்களையும் நிறைவேற்றுவோம்.

இன்று அரசியல் மேடைகளில் தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்திவருகின்றனர்.

ஆனால் இந்த நாட்டில் போலிபிரசாரம் ஊடாக இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தி தெரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This