அடுத்த தேர்தலில் விரலில் மை பூச வேண்டிய தேவையில்லை!

அடுத்த தேர்தலில் விரலில் மை பூச வேண்டிய தேவையில்லை!

தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியில் 2010-ம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருவதால், ஒருவர் இரு இடங்களில் வாக்களித்ததாகப் பதிவு செய்தால் அவர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அதன்படி, விரலில் மை பூச வேண்டிய அவசியம் இல்லை அதற்கான செலவை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுப்பதற்காகவே விரல் வண்ணம் பயன்படுத்தப்பட்டது
தனி நபர்களின் பதிவை கணினிமயமாக்கி, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே மாதிரியான பெயர்கள் கண்டறியப்படும் என்றும், அடையாள அட்டை எண்கள் போன்றவை சரிபார்க்கப்படுவதால், இரு இடங்களில் தனிநபரின் வாக்குகள் பதிவாவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  விரலில் மை பூசுதல்  தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This