ஏன் பிரிட்டன் தமிழர்கள் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு வாக்களிக்கவேண்டும் ? கட்சி வேட்பாளர் பொபி டீன் விளக்கம்
இலங்கையின் பாதுகாப்பு படையின் பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராகவும் அவரை போன்றவர்களிற்கு எதிராகவும் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என லிபரல் ஜனநாயக கட்சியினர் வேண்டுகோள் விடுத்துவந்துள்னர் என அந்த கட்சியின் கார்சல்டொன் வலிங்டன் வேட்பாளர் பொபி டீன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட்டேவி தமிழ் சமூகத்தினை நீண்டகாலமாக ஆதரிப்பவர்.அவரது தலைமைத்துவத்தின் கீழ் கென்சவேர்ட்டிவ்கள் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும்,குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என லிபரல் ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்துள்ளனர்.
நாங்கள் நீதிக்கான தேடலை நிறுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார் – அது மிகச்சரியானது.
லிபரல் ஜனநாயக கட்சியினர் ஒடுக்குமுறைக்கு எதிரான தனிநபர்களின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுத்துள்ளனர்.என்னை தெரிவு செய்தால் எனது தொகுதியிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ் சமூகத்திற்காக நான் பரப்புரை செய்வேன்.
தமிழர்களிற்கு எதிரான வன்முறைகள் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்வதை அவதானிக்க முடிகின்றது – குறிப்பாக இலங்கையின் வடகிழக்கு பகுதிகளில் இந்த நிலை காணப்படுகின்றது , அங்கு அச்சுறுத்தும விதத்தில் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் நீதிதுறை குறைபாடுள்ளதாக காணப்படுகின்றது தன்னிச்சையாக தடுத்துவைத்தல் கைதுகள் போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்வதை நாங்கள் அவதானித்துள்ளோம்.இவை அனைத்தும் நிறுத்தப்படவேண்டும்.
இலங்கையின் பாதுகாப்பு படையின் பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராகவும் அவரை போன்றவர்களிற்கு எதிராகவும் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என லிபரல் ஜனநாயக கட்சியினர் வேண்டுகோள் விடுத்துவந்துள்னர்.
மோசமான மனித உரிமை வரலாற்றை கொண்ட இலங்கை உட்பட அனைத்து நாடுகளினதும் ஆயுத விற்பனை விண்ணப்பத்தினை அறிமுகப்படுத்துவதை நாங்கள் வரவேற்கின்றோம்.
இலங்கைக்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்த நிதி உதவியும் தமிழர்தாயகப்பகுதிகளை இராணுவமயமாக்கும் முயற்சிகளை எதிர்ப்பதுடன் தொடர்புபட்டதாக காணப்படவேண்டும்.
உண்மை நல்லிணக்கம் தொடர்பான திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டும்.