இன்னும் நான்கே ஆண்டுகள்… வாழும் நாஸ்ட்ரடாமஸ் கூறும் புதிய தகவல்கள்
இன்னும் நான்கு ஆண்டுகளில் மனித வாழ்வையும் நாகரீகத்தையும் மாற்றவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் நிகழவிருப்பதாக தெரிவிக்கிறார் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஒருவர்.
எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé, 37).
தொடர்ந்து அவர், மூன்றாம் உலகப்போர் முதல், இந்த ஆண்டிலும், அடுத்த சில ஆண்டுகளிலும் நிகழவிருக்கும் பல்வேறு விடயங்களைக் குறித்த கணிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.
சில முக்கிய மாற்றங்கள்
அவ்வகையில், இன்னும் நான்கு ஆண்டுகளில் ஏலியன்கள் கண்டுபிடிக்கப்படுவதை எதிர்கொள்ள மனிதர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஏதோஸ்.
வரும் ஆண்டுகளில், தொடர்ச்சியாக அறிவியல் தொடர்பிலான அரிய கண்டுபிடிப்புகள் நிகழும் என்றும், அவை மனித வாழ்வையும் நாகரீகத்தையும் குறித்த நமது புரிந்துகொள்ளுதலை மாற்றும் வகையிலான கண்டுபிடிப்புகளாக இருக்கும் என்கிறார் ஏதோஸ்.’
2026க்கும் 2028க்கும் இடையில், நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சியும், இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏலியன் ஒன்றைக்குறித்த விடயங்களைக் கண்டுபிடிக்கும், அது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இருக்கும் என்கிறார் ஏதோஸ்.
ஜூபிடரின் சந்திரன்களில் ஒன்றில் அறிவியலாளர்கள் மிகவும் வித்தியாசமான நுண்ணுயிரிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறும் அவர், இதற்கு முன் அப்படிப்பட்ட உயிரினங்களை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்கிறார்.
இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகத்தையே மாற்றக்கூடும் என்றும், உயிரின் தோற்றம் குறித்த கொள்கைகளை மீளாய்வு செய்யவைக்கக்கூடும் என்றும், இதுவரை இல்லாத வகையில் பலவித கண்டுபிடிப்புகளையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் செய்ய இருக்கிறார்கள், அவை வரலாற்றையே மீளாய்வு செய்யத் தூண்டும் என்றும் அடுக்கிக்கொண்டே செல்கிறார் ஏதோஸ்.