பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார் ஷெபாஸ் ஷரீப்!

பாகிஸ்தானில் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார் ஷெபாஸ் ஷரீப்!

பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், “சன்னி இதெஹத் கவுன்சில்” (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் “பாகிஸ்தான் மக்கள் கட்சி” (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று, “நேஷனல் அசெம்பிளி” (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

“சன்னி இதெஹத் கவுன்சில்” ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This