கள்ளச்சாராய உயிரிழப்பு 47ஆக உயர்வு.. மேலும் 30 பேர் கவலைக்கிடம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி

கள்ளச்சாராய உயிரிழப்பு 47ஆக உயர்வு.. மேலும் 30 பேர் கவலைக்கிடம் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 47 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடம் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதில், ஏற்கனவே 42 பேர் உயிரிழந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இதில், இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். இந்த தகவல் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This