ரணிலை ஆதரிக்க ராஜிதவின் ரகசிய நகர்வு: கைகோர்க்கும் 100 எம்.பிகள்?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நூறு எம்.பி.க்கள் கொண்ட கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ராஜித சேனாரத்ன, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவும் ரணில் விக்ரமசிங்கவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டவர்கள்.
நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தானும் தனது குழுவினரும் ஆதரவளிப்பதாகவும் தன்னை துரோகியாகக் கருத வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ராஜித சேனாரட்ன மேற்கொண்டுவரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜுலை மாதம் ரணில் விக்ரமசிங்க தாம் வேட்பாளராக போட்டியிடுவது குறித்த அறிவிப்பை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளார்.
அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுவரும் ராஜித சேனாரட்ன மற்றும் நிமல் லான்சாவின் கூட்டணிகள் குறித்த வெளிப்படையான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.