அபுதாபி இந்து கோவிலுக்கு இதுவரை 10 லட்சம் பேர் வருகை- புள்ளிவிவரம் வௌியீடு

அபுதாபி இந்து கோவிலுக்கு இதுவரை 10 லட்சம் பேர் வருகை- புள்ளிவிவரம் வௌியீடு

கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது. கோவிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், அபுதாபி கோவிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பெப்ரவரி மாதம் 14-ஆம் திகதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் திகதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை எட்டியுள்ளது.

CATEGORIES
Share This